Follow Us:
Wednesday, July 18, 2018

நியாயமான விசாரணை நடைபெற்றால் துபாயிலிருந்து திரும்பத் தயார் என்கிறார் தமிழ்நாட்டின் தாவூத்

ARUN JANARDHANAN talks to Dhanapalan Sridhar and pieces together his journey from selling arrack to becoming a ‘real estate don’ with seven murder cases and countless enemies and fans.

Written by Arun Janardhanan | Chennai | Published: January 19, 2016 7:35:06 am
dhanapalan sridhar, real estate don, don in india, chennai don, don sridhar, most wanted don in tamil nadu, tamil nadu don Don Sridhar is facing 43 cases, including seven of murder.

“தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யோ அல்லது ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியோ நியாயமான விசாரணைக்கு உறுதி அளித்து நாளைக்கே என்னை வரச் சொன்னால் என் மீதான அனைத்து வழக்குகளையும் பைசல் செய்யப்படுவதில் நான் நான் சந்தோஷப்படுவேன்” என்றார் தாதா ஸ்ரீதர்.

தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாகத் தேடப்படும் நபரான இவரை தமிழ்நாட்டின் தாவூத் இப்ராஹிம் அல்லது தாதா ஸ்ரீதர் என்ற போலீஸ் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். துபாயிலிருந்து செயல்படும் இவர் சென்னை அருகே சுமார் 500 கோடி ருபாய் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் மாபியா ராஜ்ஜியத்தை நடத்திவருவதாகக் கூறுகின்றனர். 7 கொலை வழக்குகள் உட்பட குறைந்தது 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு இணையதளம் வழியாக பிரத்யேக வீடியோ நேர்காணல் அளித்தார் ஸ்ரீதர் தனபாலன். பத்திரிகைக்கு அவர் அளிக்கும் முதல் நேர்காணல் இது. நியாயமான விசாரணைக்கு உறுதியளிக்கப்பட்டால், இந்தியா திரும்பி சட்ட நடவடிக்கைகளை தான் எதிர்கொள்ளத் தயார் என அவர் கூறினார். காஞ்சிபுரத்தில் ஒரு காலத்தில் கள்ளச்சாராய வியாபாரியாக இருந்த 43 வயதான இவர், தனது பிசினஸ் விசா

Watch the interview here

2017ல் காலாவதியானதும் தானாகவே தமிழ்நாடு திரும்பினால், தமிழ்நாடு போலீஸ் என்கவுன்டரில் தன்னைத் தீர்த்துக்கட்டி விடுவார்கள் என அஞ்சுகிறார். தமிழ்நாடு டி.ஜி.பி.யோ அல்லது நேர்மையான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியோ நியாயமான விசாரணைக்கு உறுதி அளித்து என்னை நாளைக்கே வரச் சொன்னால் என் மீதான அனைத்து வழக்குகளும் பைசல் செய்யப்படுவதில் நான் நான் சந்தோஷப்படுவேன். அவர்கள் என்னை என்கவுன்டரில் கொல்ல வேண்டியதில்லை, என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஏதாவது ஆதாரம் இருந்தால், சயனைடு உட்கொண்டு நானே தற்கொலை செய்துகொள்வேன்” என துபாயிலிருந்து பேசும்போது அவர் கூறினார்.

Share This Article
Share
Related Article

தான் தமிழ்நாடு திரும்பினால், போலீசார் தன்னைக் குறிவைத்துக் கொல்வார்கள் என தனது ஆதரவாளர்கள் தன்னிடம் கூறியதாகச் சொன்ன அவர், “நான் கொல்லப்படுவதை விரும்பவில்லை, இந்தியா திரும்புவது பற்றி இதுவரை நான் முடிவெடுக்கவில்லை” என்றார்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு டி.ஜி.பி. அசோக் குமாரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. வடக்கு மண்டல ஐ.ஜி.பி.யான பி. தாமரைக் கண்ணன், “சில வாரங்களுக்குப் பிறகுதான் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க முடியும்” என்று கூறினார். இவரது சரகத்தில்தான் காஞ்சிபுரம் உள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், ‘தி இந்தியன் எக்ஸ்பிர’சிடம் பேசும்போது, எங்களது பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 கிரிமினல்களில் அவர்தான் (தனபாலன்) மிகத் தீவிரமாகத் தேடப்படும் நபர். அந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ரவுடி என்ற நிலையில் உள்ளவர் அவர் மட்டுமே” என்றார்.

ஆறு மாத சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட பிறகு 2013 மார்ச்-ஏப்ரலில் இந்தியாவிலிருந்து தனபாலன் வெளியேறினார் என்பதை உறுதி செய்த மூத்த போலீஸ் அதிகாரிகள், துபாயிலிருந்து இதுவரை அவர் திரும்பி வரவில்லை என்றும் கூறினார்கள். இதற்கு முன்னர் பல வழக்குகளில் பல தடவை அவர் சிறைத் தண்டனை பெற்றவர் என்றும் கூறினார்கள். 2015-ல் அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது என்பதையும் தேடப்படும் குற்றவாளியாக அவரது பெயரை சர்வதேச போலீஸ் அறிவித்துள்ளதையும் போலீசாரும் தனபாலும் உறுதிசெய்தனர்.

தனபாலனின் சகோதரர் உட்பட அவரது 7 சகாக்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் அடைத்தபோது, அந்தக் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனவரி 3-ம் தேதி மிரட்டப்பட்டார். அதையடுத்து, தனபாலன் விவகாரத்தில் போலீசார் மீண்டும் தீவிரம் காட்டிவருகின்றனர்.

தொலைபேசி மிரட்டலை அடுத்து, தனபால் மீது மேலும் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தனபாலன் மீதான வழக்குகளில் பெரும்பாலானவை காஞ்சிபுரத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் நடைபெற்ற ரியல் எஸ்டேட் பேரங்கள் தொடர்பானவை என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

காஞ்சிபுரத்தில் மட்டும் தனபாலனுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கட்டடங்கள் உள்ளதாக போலீஸ் உளவுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

“இவை எல்லாமே போலீசாரின் கற்கனைதான்,” என்று கூறிய தனபாலன், துபாயில் உள்ள கட்டுமானத் தளங்களில் இயக்கப்படும் ஜெனரேட்டர்களுக்கு டீஸல் சப்ளை செய்வதுதான் தனது பிரதான பிசினஸ் என்றார்.

“2008-ல் கள்ளச் சாராய வியாபாரத்தை நிறுத்திவிட்டு ரியல் எஸ்டேட் பிசினசை ஆரம்பித்தேன். எனக்குச் சொந்தமான சொத்துக்களின் மொத்த மதிப்பு பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு 150 ஏக்கர் நிலம், பெரும்பாலும் பண்ணை நிலம் உள்ளது.

துபாய் வந்த பிறகு நிலம் வாங்கினேன். இதற்காக 15 பேரங்கள் நடைபெற்றன. நான் ஒரு இந்து, இந்தியன், திருக்குறளின் கோட்பாடுகளின்படி வாழ்ந்துவருகிறேன். யாருடைய நிலத்தையும் மிரட்டியோ, பலவந்தமாகவோ நான் பிடுங்கவில்லை” என்று சொன்னார், தனபாலன்.

“(ஆனால்), நான் காந்தியோ அல்லது புத்தரோ இல்லை. இயேசுநாதரும் இல்லை, யாராவது என் ஒரு கன்னத்தில் அறைந்தால், நான் மறு கன்னத்தைக் காட்ட மாட்டேன். இயேசுநாதருக்கு என்ன நடந்தது? 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டார்.

பிரச்சினைகளை நான் விரும்பவில்லை, ஆனால் என்னைத் துன்புறுத்த அல்லது என் உயிருக்கு ஆபத்து விளைவிக்க முயலும் யாருடனும் மோதுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றும் சொன்னார்.

ரியல் எஸ்டேட் பேர விவகாரத்தில் தன்னை அச்சுறுத்தியதாக உள்ளூர் அ.இ.அ.தி.மு.க. கொடுத்த புகாரின் பேரில் சமீபத்தில் தனபாலனின் சகாக்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், தனபாலன் தனக்கு எதிராக அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அதிகாரிகளின் கோரிக்கைகளைத் தான் நிராகரித்ததால்,

பெரும்பாலான வழக்குகள் தன் மீது போலியாக ஜோடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுனார். “அப்துல்லா என்ற பழைய இரும்பு வியாபாரி சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கிலும்கூட எனது நண்பர்களைத் தொடர்புபடுத்த போலீசார் முயன்றுவருகின்றனர் என எனக்குத் தெரியவந்துள்ளது. நான் ஒரு சுலபமான இலக்கு… எனக்கு எதிரான குற்றச் சாட்டுகளின் உண்மைத் தன்மையை மூத்த அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

ஆனால், விசாரணைகள் இதற்கு நேர் எதிரான விஷயத்தைக் கூறுவதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். பிசினஸ் தகராறு காரணமாக அப்துல்லா கொலையைத் திட்டமிட்டு நடத்தியதாக தனபாலன் மீதுதான் சந்தேகம் உள்ளது என அந்த அதிகாரி கூறினார்.

click here to read in English

For all the latest India News, download Indian Express App